|
பல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கிய ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கி தயாரித்து வரும் பிரம்மாண்ட படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், மஹத் ராகவேந்தர் என பல பெரிய நட்சத்திரங்கள் நடிக்க, அறிமுக இயக்குனரான ஆர்.ஜே.நேசன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசை அமைக்கிறார். ஆர்.பி.சௌத்ரி, விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் என இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
|