|
விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக கடந்த சட்டசபை தேர்தலில் குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு. ஆனால் கடைசியில் திமுக., படுதோல்வியை சந்திக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் வடிவேலு. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கும் வடிவேலு தினமலருக்கு அளித்த அசத்தல் பேட்டி இதோ...
* இரண்டாண்டு இடைவெளியில் கற்ற பாடம்?
பாடத்தை விடுங்கண்ணே. ஓய்வின்றி, ரொம்ப வேகமா ஓடிக்கிட்டிருந்த குதிரை, கொஞ்சம் களைப்படைஞ்சு, பசும்புல் சாப்பிட ஒதுங்கியிருந்துச்சு. நிறைய சாப்பிட்டு, தெம்புடன், மீண்டும் ரேஸ்ல ஓட வந்திருக்கு. சரியான பாதையில், இலக்கை நோக்கி ஓட முடிவு செஞ்சிருக்கு, இந்த குதிரை. கண்டிப்பா, இந்த குதிரைக்கு வெற்றி மாலை கிடைக்கும்.
|