|
டைரக்டர் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு இறக்குதியானவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். அங்குள்ள படங்களில் டூபிஸ் உடைகள் அணிந்து நடித்து வந்தவரை குத்து விளக்காக மாற்றிக்காட்டினார் விஜய். அதனால் இந்திய சினிமா மீது எமிக்கு ஆர்வம் ஏற்படவே, பின்னர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடித்தார். அப்போது, அப்படத்தில் நாயகனாக நடித்த பிரதீக் மீது எமிக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் படப்பிடிப்பு முடிந்த பிறகும் அடிக்கடி மும்பை ஓட்டல்களில் ஜாலியாக சுற்றித்திரிந்தனர்.
அதையடுத்து இந்தியில் படங்கள் இல்லாத எமி, தமிழுக்கு வந்து தாண்டவம் படத்தில் நடித்தவர் இப்போது ஐ படத்தில் நடித்து வருகிறார். இதன்காரணமாக, பிரதீக்குடனான இடைவெளி அதிகமாகி விட்டது. இந்த நேரத்தில் பிரதீக் இன்னொரு இந்தி நடிகையுடன் ஊர் சுற்றுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் கடும் டென்சனாகியுள்ளார் எமி. இதைப்பற்றி விசாரிக்க, அவர் பிரதீக்கை தொடர்பு கொண்டபோது அவரது அழைப்புகளை அவர் துண்டித்து விட்டாராம். இதனால் சில நாட்களாக ஐ படப்பிடிப்புக்கு கூட டேக்கா கொடுத்து விட்டு உடல்நிலை சரியில்லை என்ற பொய் காரணத்தை சொல்லி ஹோட்டலில் அழுது புலம்பிக்கொண்டிருந்தாராம் எமி.
|