Menu Left Menu Right
சினிமா
அஞ்சலியுடன் மீண்டும் நடிக்க விரும்பும் அங்காடித்தெரு மகேஷ்!
Default

அங்காடித்தெரு படத்துக்காக திருநெல்வேலி பகுதிக்கு லொகேசன் பார்க்க சென்ற இடத்தில் பேஸ்கெட் வீரரான மகேஷை பார்த்த டைரக்டர் வசந்தபாலன், அப்படத்தின் ஹீரோவாக்கினார். இப்படி எதிர்பாராதவிதமாக ஹீரோவான மகேஷ், முதல் படத்திலேயே பல படங்களில் நடித்திருந்த அஞ்சலியுடன் நடித்தார். அப்போது, மகேசுக்கு நிறைய நடிப்பு சொல்லிக்கொடுத்திருக்கிறார் அஞ்சலி. அதன்காரணமாக, இருவரும் நல்ல நட்பாகி விட்டார்களாம்.
ஆனால், அதன்பிறகு அஞ்சலி ரொம்ப பிசியாகி விட்டதால், அவர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. அவர் பிசியான நடிகையாகி விட்டதால், மகேசும் அவரை விட்டு தள்ளியே நின்றிருக்கிறார். ஆனால், ஒருநாள் திடீரென்று அவருக்கு போன்போட்ட அஞ்சலி, மீண்டும் ஆரம்பத்தில் பழகியது போலவே நட்பை புதுப்பித்துக்கொண்டாராம்.
இதுபற்றி மகேஷ் கூறுகையில், அஞ்சலி என்னை தொடர்பு கொள்ளாமல் இருந்ததால், பந்தா நடிகை என்று நினைத்தேன். ஆனால் அவர் ரொம்ப நல்லவர். நான்தான் விவரம் தெரியாமல் நாம் அவரிடம் பேசினால் தவறாக எண்ணி விடுவாரோ என்று விலகி நின்றிருக்கிறேன். சேட்டை படத்துக்கு முன்புதான் அஞ்சலியின் நல்ல மனசு எனக்குத் தெரிந்தது என்று சொல்லும் மகேஷ், மீண்டும் அஞ்சலியுடன் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைக்காதா என்று தான் ஆசையுடன் இருப்பதாகவும் சொல்கிறார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!