Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
கழிவுநீருக்கு மத்தியில் பம்பிங் ஸ்டேஷன்
Default

ஈரோடு: காவரி ஆற்றில் குடிநீருக்கான தண்ணீர் எடுக்கும் பம்பிங் அமைந்துள்ள இடத்தை சுற்றிலும், பிளீச்சிங் மற்றும் சாக்கடை கழிவுநீர் சூழ்ந்து கடும் துர்நாற்றம் அடிக்கிறது. சுத்தமான குடிநீரை வழங்க, தண்ணீர் சுத்திகரிப்பு முறை மாற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு மாநகராட்சியானது ஐந்து லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு காவிரி ஆற்றில், 9 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து, 52 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, விநியோகித்து வருகின்றனர். நேரடியாக குழாய் மூலமாகவும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு லாரிகள் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். மழையின்றி மேட்டூர் அணையில் தண்ணீர் வற்றியதால், குடிநீருக்கான குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவு வரும் தண்ணீரில், சுண்ணாம்பு ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையின் வழியாக வரும் சாக்கடை கழிவுநீர் கலந்து, ஆறு முழுவதும் சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் பம்பிங் ஸ்டேஷனின், ஆற்றுக்குள் உள்ள பம்பிங் பகுதியை சுற்றி குப்பை கழிவுகளுடன் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளது.
பம்பிங் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு தொட்டியில் விட்டு சுத்திகரித்தும், மாநகர பகுதியில் தொட்டிக்கும், அங்கிருந்து வீடுகளுக்கு விநியோகிக்கும் போது, கலங்கலாகவும், துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீரை சுத்தப்படுத்த தேவையான அளவு குளோரின் பயன்படுத்திய போதிலும், ஆற்றில் வரும் கழிவுநீரால் தண்ணீர் சுத்தமாவதில்லை. வீடுகளில் பொருத்திய சிறிய மற்றும் சாதாரன ஆர்.ஓ., பிளான்ட்களில் மாநகராட்சி குடிநீரை செலுத்தி சுத்திகரிக்கும் போது, இயந்திரங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது.
இதனால் ஆழ்குழாய் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை, ஆர்.ஓ., பிளான்ட்களில் பயன்படுத்தும் அளவுக்கு, மாநகராட்சி குடிநீர் சுகாதாரமற்றதாக உள்ளதாக, பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, தண்ணீரை சுத்தப்படுத்த மாற்றுவழிகளை கையாள திட்டமிடவேண்டும்.
காவிரியில் வரும் தண்ணீரில், 50 சதவீதத்துக்கு மேல் கழிவுநீராக உள்ளது. சுகாதாரமாக, துர்நாற்றமின்றி குடிநீர் வழங்கிட, புதிதாக திட்டமிட்டு, நவீன சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்தி சுத்திகரித்து வழங்கிட மாநகராட்சியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!