Menu Left Menu Right
ஈரோடு செய்திகள்
அம்மா திட்ட முகாம்
Default

அந்தியூர்: அந்தியூர் யூனியன், நகலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில், மக்களை தேடி வருவாய் துறை திட்ட விழா நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் வெள்ளியங்கிரி வரவேற்றார். அந்தியூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் மீனாட்சிசுந்தரம், புறநகர் மாவட்ட துணை செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ., ரமணீதரன் பேசினார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை உள்ளிட்ட, 525 மனுக்கள் பெறப்பட்டன.
உடனடியாக தீர்வு காணப்பட்ட, 100க்கும் மேற்பட்ட பயனாளிக்கான உத்தரவை, எம்.எல்.ஏ., ரமணீதரன் வழங்கினார். மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், ஜெ., பேரவை செயலாளர் வேலுசாமி, பஞ்சாயத்து செயலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!