|
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் பசுந்தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் பசுந்தீவன அபிவிருத்தி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கறவை மாடு களின் பால் உற்பத்தி செல வில் 70 சதவீதம் தீவனத்திற்கு மட்டுமே செலவிட வேண்டி உள்ளதாலும் கால்நடைகளுக்கு சரிவிகித தீவனம் வழங்க வேண்டி உள்ளதா லும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் 4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பசு மற்றும் எருமையிங்கள் உள்ளதாக கால்நடைத்துறையினர் கணக்கிட்டு உள்ளனர். தமி ழக அரசிடமிருந்து இத்திட்டத்திற்காக மானியம் ஒதுக்கப்படுகின்றது. தீவன பயிர் சாகுபடி செய்வது, நீர் சேமிப்பு கருவிகள் வாங்கு வது, புல் வெட்டும் கருவிகள் மற்றும் விவசாய பணிகளுக்கான தளவாட கருவி கள் வாங் குவது உள்ளிட்டவைகளுக்கு இந்த மானியம் செலவிடப் பட்டு வருகின்றது. கடந்த நிதியாண்டில் மாநில அளவில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஈரோடு மாவட்டத்திற்கு மட் டும் ரூ.1.99 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டது. மானிய தொகையின் மூலம் 1877 விவசாயிகளுக்கு ரூ.53 லட்சம் செலவில் பசுந்தீவன அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டது. 155 விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் செலவில் நீர்சேமிப்பு கருவிகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மானியத்தை 4 ஆயிரம் விவசாயிகளுக்கு 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தீவனம் பயிர்செய்ய வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள கால்நடை ஆஸ்பத்திரிகளில் தங்களது பெயர் களை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்னுரிமை பதிவேட்டின் படி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|