Menu Left Menu Right
மருத்துவம்
குழந்தைகள் வயிற்று போக்கை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு
Default

வயிற்றுப் போக்கால், ஆண்டுதோறும், 1.60 லட்சம் குழந்தைகள் மரணமடைந்து வரும் நிலையில், அதற்கு தீர்வு காணும் வகையில், புதிய தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ உலகில், புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், இந்த தடுப்பூசி, மலிவான விலையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், "பயோ டெக்னாலஜி' துறையின் செயலர் விஜயராகவன், டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நிறைய பிரச்னைகளை சந்திக்கின்றன. குறிப்பாக, வயிற்றுப் போக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், குழந்தையின் எடை குறைந்து, அடுத்தடுத்து பல பிரச்னைகள் உருவாகின்றன. வயிற்றுப் போக்கு நோய்க்கு, நம் நாட்டில், ஒவ்வொரு ஆண்டும், 1.60 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இந்த பரிதாப நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன."1985 முதல் ஆய்வு'வயிற்றுப் போக்கால் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. 1985ல், வயிற்றுப் போக்கிற்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், சிகிச்சை பெற்ற குழந்தையின், ரத்த மாதிரியை சேகரித்து, அதன்மூலம் ஆய்வுகள் ஆரம்பமாகின. அந்த ஆய்வின் அடிப்படையில், தற்போது, புதிய தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அரசும், தனியார் நிறுவனங்களும் இணைந்து கூட்டுமுயற்சி செய்ததன் பயனாக, இந்திய மருத்துவ துறையில், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், "ரோட்டா வைரஸ்' என்ற, புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க, இந்திய மருத்துவர்களும், மருத்துவ விஞ்ஞானிகளும், தொழில்நுட்பமும் ஒருங்கிணைந்து, இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ டெக்னாலஜி துறையும், ஐதராபாத்தைச் சேர்ந்த, "பாரத் பயோ டெக்' என்ற நிறுவனமும் இணைந்து, இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.

"வேலூரில் பரிசோதனை'வேலூர் மருத்துவமனை, புனே மருத்துவமனை மற்றும் டில்லி மருத்துவமனை என, மூன்று இடங்களில், இந்தத் தடுப்பூசிகளின் பரிசோதனை நடைபெற்றது. பரிசோதனையின் போது, சர்வதேச நடைமுறைகளே பின்பற்றப்பட்டன. மிக, மிக எச்சரிக்கையாக நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.

அடுத்த, எட்டு மாதங்களுக்குள், "ரோட்டா வைரஸ்' தடுப்பூசி சந்தைக்கு வந்து விடும். குழந்தை பிறந்ததில் இருந்து, 6வது வாரம், 10 வது வாரம் மற்றும், 14வது வாரம் என, மூன்று முறை, இந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசியை, குழந்தைகளுக்கு போட வேண்டும்.மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையின், அனுமதி கிடைத்ததும், ஏழை மக்களும் பயன்படுத்தும் வகையில், 150 ரூபாய்க்கு, இந்த தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.இந்த தடுப்பூசி மருத்துவ உலகில், மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில், சந்தேகம் இல்லை. நம்நாட்டில் மட்டுமின்றி, ஏழை நாடுகளும், இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள முன்வரும். இவ்வாறு விஜயராகவன் கூறினார்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!