|
சென்னை : சென்னையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய விஜய்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காலை முதல் கீழ்பாக்கம் குடியிறுப்பு பகுதியில் துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த விஜய்கரால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு சொந்தமான காரில் தப்பிக்க முயன்ற போது , கார் பொது மக்களை அருகே சென்றது. அப்போது போலீசாரால் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு விஜய்கர் பிடி பட்டார். இவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
|