Menu Left Menu Right
தமிழக செய்திகள்
தண்ணீரின்றி திரியும் வாயில்லா ஜீவன்கள்
Default

செங்குன்றம்:கத்தரி வெயில் வெப்பம் தாங்காமல், நகரின் பல பகுதிகளில், கால்நடைகள் தண்ணீருக்காக பரிதாபமாக அலைந்து திரிகின்றன.கடந்த இரு மாதங்களாக நீடிக்கும் கடுமையான வெயில் தீவிரமடைந்து, தற்போது கத்தரி வெயில் சுட்டெரிக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.திரியும் கால்நடைகள்தெரு மற்றும் சாலைகளில் சுற்றி திரியும் பசு மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீருக்காக அலைந்து தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. கால்வாய், குளம், குட்டை ஆகியவையும் வறண்டு விட்டன.இந்த நிலையில் வீடு, கடை உள்ளிட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவை வருகின்றன. பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றில் இருக்கும் தண்ணீரை குடித்து தாகம் தணிக்கின்றன.சாலையோரங்களில் சுற்றி திரிந்து மேயும் மாடுகள், சில நேரம் தண்ணீர் வராத குழாய்களில் தண்ணீர் கிடைக்கும் என்று குடிக்க முயன்று, ஏமாற்றத்துடன் திரும்புவதை கண்டால் கல் மனமும் கசிந்துருகும். தடையில்லைஒரு சில பகுதிகளில் குடங்களில் பிடித்து வைக்கப்படும் தண்ணீரை குடிக்கும் முயற்சியில், குடம் அல்லது பக்கெட்டுகளை சாய்த்து தண்ணீரை கொட்டி விடுகின்றன.கிராமங்களில் கால்நடைகள் குடிப்பதற்காக தொட்டிகள் கட்டி வைத்து தண்ணீர் நிரப்பி வைக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. நகர்ப்புறங்களில் மனித நேயமுள்ளவர்கள், தங்கள் வீடுகளில் அல்லது வாய்ப்புள்ள இடங்களில், கால்நடைகளுக்கு தண்ணீர் வைத்து உதவி வருகின்றனர். தாகத்தின் தவிப்பை அறியாத மனிதர்கள் இல்லை. வாயில்லா ஜீவன்களின் தாகம் தணிக்க யாருக்கும் தடையில்லை.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!