Menu Left Menu Right
தமிழக செய்திகள்
விவசாயிகளுக்கு இல்லை விழிப்புணர்வு
Default

சூலூர்:ஒழுங்கு முறை விற்பனை கூடம் குறித்து, பெரும்பாலான விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால், குறைந்த அளவு விவசாயிகளே பயன்படுத்துகின்றனர்.விவசாய விளைபொருட்களை பாதுகாப்புடன் இருப்பு வைத்து, விற்பனை செய்ய, ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் ஒன்றிய வாரியாக துவக்கப்பட்டன. மஞ்சள், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, நெல், கரும்பு வெல்லம், புகையிலை, தேங்காய், மிளகாய், சோளம், ராகி, பாக்கு, மரவள்ளிகிழங்கு, வெங்காயம், எள் உள்ளிட்டவைகளை ஒழுங்குமுறை கூடத்தில் இருப்பு வைத்து, உரிய விலை கிடைக்கும் போது விற்கலாம்.விழிப்புணர்வு இல்லை: இக்கூடங்களை பயன்படுத்துவதில் பெரும்பாலான விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை. சூலூர் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் லே-அவுட்களாக மாறியுள்ளன. இளைய தலைமுறையினர் விவசாயம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.வியாபாரிகள் விவசாயிகளின் தோட்டத்துக்கே சென்று, விலை பேசி கொள்முதல் செய்கின்றனர். இதனால், பொருட்களை சேமிக்க வேண்டிய அவசியம் குறைந்து வருகிறது. பொருட்களின் சந்தை விலை என்ன, இருப்பு வைத்து விற்றால் லாபம் கிடைக்குமா ? என்ற விபரங்கள் அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால், முழுமையான லாபம் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை.காலியாக கிடக்கும் குடோன்: 10 ஏக்கர் பரப்பளவுள்ள சூலூர் விற்பனைக்கூடத்தில், 550, 625 மெட்ரிக் டன் அளவுக்கு பொருட்களை இருப்பு வைக்கும் இரு குடோன்கள் உள்ளன. 60க்கு 60 அடி நீள, அகலமுள்ள உலர் களங்கள் இரண்டு உள்ளன.

வியாபார கொட்டகை ஒன்றும் உள்ளது. பல ஆண்டுகளாக வியாபார கொட்டகை மற்றும் ஒரு குடோன் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சூலூர் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் புருஷோத்தமராவ் கூறியதாவது:ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளுக்கும், உரிமம் உள்ள வியாபாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்கள் நவீன முறையில் பாதுகாக்கப்படுகிறது. தரத்திற்கு ஏற்ப விலை கிடைக்க, தரக்குறியீடுகள் வழங்குகிறது. விவசாயிகளின் பொருளுக்கேற்ற உயர்ந்தபட்ச விலை கிடைக்கும் வகையில் மறைமுக ஏலம், பகிரங்க ஏலம் நடத்தப்படுகிறது. விலை வீழ்ச்சியாக இருக்கும் காலங்களில், இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருளின் மதிப்பில் ரூ. 2 லட்சம் வரை பொருளீட்டு கடன், ஐந்து சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. கிராமங்களில் குறைந்த விளைச்சல் உள்ள விவசாயிகள், தங்களுக்குள் குழு அமைத்துக் கொள்ளலாம். அதன் மூலம் விற்பனை கூடத்தில் பொருட்களை இருப்பு வைக்கும் வசதியும் உள்ளது. சூலூர் சுற்றுவட்டார விவசாயிகள் விற்பனை கூடத்தை பயன்படுத்தி அதிக லாபம் அடையலாம். இது குறித்து பிரசாரம் செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இளைய தலைமுறையினர் விவசாயம் செய்வதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். இதனால், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!