|
முருங்கை மரம் 4-5 அடி உயரம் இருக்கும் போது, அதன் உச்சிக் கொழுந்தை கிள்ளிவிட்டால் அதிக கிளைகள் உண்டாகும். முருங்கை கம்பளிப்புழுவை கட்டுப்படுத்த மண்ணில் வேர் அருகில் விரல் வடிவ பெருங்காயத்தை வைத்தால் போதும். இலை கழிவு மற்றும் இதர கழிவுகளை மரத்தின் அடிப்பாகத்தில் போட்டு எரித்தால், கம்பளிப்புழு தாக்குதல் கட்டுப்படும். செடி முருங்கையில் 3 தடவை மறுதாம்பு பயிர் விடலாம்.
|