Menu Left Menu Right
இலக்கியம்
தினம் தினம் மன்றாடுவோம்
Default

‘‘குழந்தாய், ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, கையேந்தி நிற்போரைக் காத்திருக்க வைக்காதே. பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே; வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே. உள்ளம் உடைந்தார்க்குத் துயரங்களைக் கூட்டாதே. வறுமையில் உழல்வோருக்குக் காலம் தாழ்த்தாமல் உதவி செய்; துன்புறுவோரின் வேண்டுதலைத் தள்ளி விடாதே. ஏழையரிடமிருந்து உன் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே. உன்னிடம் உதவி வேண்டுவோரிடமிருந்து உன் கண்களைத் திருப்பிக் கொள்ளாதே. உன்னைச் சபித்திட யாருக்கும் வாய்ப்பு அளிக்காதே. ஏழைகள் கசப்புணர்வினால் உன்னைச் சபித்தால், அவர்களைப் படைத்தவர் அவர்களுடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.

மக்களின் அன்புக்கு உரியவனாய் இரு; பெரியோர்களுக்குத் தலை வணங்கு. ஏழைகளுக்குச் செவி சாய்; அவர்களுக்கு அமைதியாய் கனிவோடு பதில் சொல். ஒடுக்குவோரின் கையினின்று ஒடுக்கப்பட்டோரை விடுவி. நீதியான தீர்ப்பு வழங்குவதில் உறுதியாய் இரு. கைவிடப்பட்டோருக்குத் தந்தையாய் இரு; அவர்களின் அன்னையர்க்குத் துணைவன் போல் இரு; அப்போது நீ உன்னத இறைவனின் பிள்ளைபோல் இருப்பாய்; தாயைவிட அவர் உன் மீது அன்பு கூர்வார். ஞானம் தன் மக்களை மேன்மைப்படுத்தும்; தன்னைத் தேடுவோர்க்குத் துணை நிற்கும். ஞானத்திற்கு அன்பர், வாழ்விற்கும் அன்பர்; அதனை வைகறையிலேயே தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர். அதனைப் பற்றிக்கொள்வோர் மாட்சியை உரிமையாக்கிக் கொள்வர்; அது செல்லும் இடமெல்லாம் ஆண்டவர் ஆசி வழங்குவார். அதற்குப் பணி செய்வோர், தூய இறைவனுக்கே ஊழியம் புரிகின்றார். ஞானத்துக்காக அன்பர், ஆண்டவருக்கும் அன்பர். ஞானத்துக்குப் பணிவோர் மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்குவர்; அதற்கு செவி சாய்ப்போர் பாதுகாப்பாய் வாழ்வர்; ஞானத்தை நம்புவோர் அதனை உரிமையாக்கிக் கொள்வர்; அவர்களுடைய வழி மரபினர்க்கும் அதனை உடைமையாக்கிக் கொள்வர். முதலில் அவர்களை அது கோணல் வழியில் அழைத்துச் செல்லும்; அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை வருவிக்கும்; தனக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் வரை அவர்களை அது கண்டிக்கும். வதைக்கும். தன்நெறிமுறைகளால் அவர்களை சோதிக்கும். அது மீண்டும் அவர்களிடமே வந்து அவர்களை மகிழ்விக்கும்; அவர்களுக்குத் தன் ரகசியங்களை வெளிப்படுத்தும். அதைவிட்டு அவர்கள் விலகிச் சென்றால், அவர்களை அது கைவிட்டு விடும்; அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.
தக்க நேரம் பார். தீமையைக் குறித்து விழிப்பாயிரு; உன்னைப் பற்றியே நாணம் அடையாதே. ஒருவகை நாணம் பாவத்திற்கு இட்டுச் செல்லும்; மற்றொரு வகை நாணம் மாட்சியையும் அருளையும் தரும். பாகுபாடு காட்டி உனக்கே கேடு விளைவித்துக் கொள்ளாதே; பணியின் பெயரால் வீழ்ச்சி அடையாதே. பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் இருந்துவிடாதே. ஞானம் பேச்சில் புலப்படும்; நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும். உண்மைக்கு மாறாகப் பேசாதே; உன் அறியாமைக்காக நாணம் கொள். உன் பாவங்களை அறிக்கையிட வெட்கப்படாதே; ஆற்றின் நீரோட்டத்தைத் தடை செய்ய முயலாதே. மூடருக்கு அடிபணியாதே; வலியோருக்குப் பாகுபாடு காட்டாதே. இறக்கும்வரை உண்மைக்காகப் போராடு; கடவுளாகிய ஆண்டவர் உனக்காகப் போரிடுவார். பேச்சில் துடுக்காய் இராதே; செயலில் சோம்பலாகவும் ஈடுபாடின்றியும் இராதே. வீட்டில் சிங்கம்போல் இராதே; பணியாளர் முன் கோழையாய் இராதே. பெறுவதற்காக மட்டும் கைகளை விரித்து வைத்திராதே; கொடுக்கும் நேரத்திலோ உன் கைகளை மூடிக்கொள்ளாதே.’’ (சீராக் ஆகமம் 4: 1-31)

நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாக இருக்கின்றேன். எனக்குப் பகைவரென யாரும் இல்லை. யார் என்னைப் பக்தியுடன் போற்றித் துதித்து வணங்குகிறார்களோ அவர்கள் என்னிடம் உள்ளார்கள். நானும் அவர்களிடம் உள்ளேன். எல்லா மனிதர்களிடத்திலும் இறைவன் உறைகின்றார். ஆனால் இறைவனிடத்தில் எல்லா மனிதர்களும் இருப்பதில்லை. இதுவே அவர்கள் துன்பப்படுவதற்கு காரணம். ஈரமான நெருப்புக்குச்சியை எவ்வளவு பலமாகத் தேய்த்தாலும் தீ பற்றுவதில்லை. உலர்ந்த நெருப்புக்குச்சியோ மெதுவாகத் தேய்த்த போதிலும் உடனே தீப்பற்றிக்கொள்கிறது. உண்மையான பக்தனுடைய இதயமானது உலர்ந்த நெருப்புக்குச்சிக்குச் சமம். பகையாலும் பொறாமையாலும் பணத்தாசையாலும் நனைந்து கிடப்பவர்களின் மனமானது ஈர நெருப்புக் குச்சியைப் போன்றது. ஒரு காட்டில் அழகான மயில் இருந்தது. அதற்கு மற்ற மயில்களைப்போல அலைந்து திரிந்து இரை தேடிச் சாப்பிடச் சோம்பல். இந்தச் சமயத்தில் காட்டு வழியே வியாபாரி ஒருவர் வந்தார். அவரிடமிருந்த உணவுப் பொருட்களைக் கேட்டது மயில். அதற்கு அவர், ‘‘உன் இறகுகளைக் கொடுத்தால் நான் உணவு தருகிறேன்’’ என்றார். மயில் அதற்குச் சம்மதிக்க, வியாபாரி உணவைக் கொடுத்து கொஞ்சம் இறகுகளைப் பிடுங்கிக் கொண்டார். இந்தக் காரியம் தினமும் தொடர்ந்தது. எந்த உழைப்பும் இன்றி கிடைக்கும் உணவு மயிலுக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் மயிலின் இறகுகளையெல்லாம் பிட

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!