Menu Left Menu Right
சற்று மு‌‌ந்‌‌தைய செய்தி
இன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்
Default



நாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

ரயில்வே துறை நிதிப் பற்றாக்குறையில் இயங்கி வரும் நிலையில், புதிய ரயில்கள், இருப்புப் பாதைகளை அறிவிப்பது ஆகியவற்றில் சதானந்த கௌடா யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது.

பயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் வளர்ச்சி சரிவடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டில் வருவாய் இலக்கை எட்டுவதற்கான உத்தி ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் புதிய திட்டங்களையும் சதானந்த கௌடா அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகரித்து வரும் எண்ணெய் விலை காரணமாக நெருக்கடியைச் சந்தித்து வரும் மத்திய அரசு, சூரிய மின்சக்தி மற்றும் பயோ டீசல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ரயில்வே திட்டங்களும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேபோல், ஓடும் ரயில்களில் இருந்து பயணிகள் விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மும்பை புறநகர் ரயில்களில் தானாகவே கதவுகள் மூடிக் கொள்ளும் திட்டத்தையும் அரசு அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், ரயில் நிலையங்கள் நவீனப்படுத்துதல், அதிவேக விரைவு ரயில் உற்பத்தி உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான தனது கொள்கையை ரயில்வே பட்ஜெட்டில் அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.

ரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!