Menu Left Menu Right
தமிழ்நாடு
கழிவுநீர் தேக்கம், குப்பை எரிப்பால் நோய் பாதிப்பில் தொழிலாளர்கள்
Default

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கம்பெனிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.டி. மற்றும் ஏற்றுமதி ஆடை நிறுவனங்களும் உள்ளன.இங்கு சென்னை, புறநகர், திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான குறுக்கு சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளன. ஒவ்வொரு சாலையிலும் 50 முதல் 100 கம்பெனிகள் உள்ளன. பல கம்பெனிகளில் கழிவுநீர்தொட்டி அமைக்கப்படவில்லை. அந்த கம்பெனிகளிலிருந்து கழிவுநீர் தினமும் வெளியேறுகிறது. இதனுடன் கம்பெனியில் பயன்படுத்தும் கழிவு எண்ணெயும் சேருகிறது. அனைத்தும் சாலையோர கால்வாய்களில் தேங்குகிறது.கால்வாய்களில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் முறையாக கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால் கால்வாய்க்குள்ளேயே மாதக் கணக்கில் கழிவுநீர் தேங்கி, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவுகிறது.இதுபோல அங்குள்ள சாலைகளில் பல இடங்களில் கம்பெனிகளில் சேரும் குப்பை, இயந்திரங்களை துடைத்த கழிவு துணிகள் போடப்பட்டுள்ளன. இவற்றை சிலர் தீவைத்து கொளுத்துகின்றனர். அவை எரியும்போது கிளம்பும் புகை மூட்டத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த காற்றை சுவாசிக்கும் தொழிலாளர்களுக்கு சுவாசக்கோளாறு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது.தொழிற்பேட்டை பகுதியில் உள்ள சாலை மின்கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை. சில கம்பங்கள் சாய்ந்து உடைந்து நிற்கிறது. இதனால் இரவு நேரங்களில் தொழிற்பேட்டை பகுதி இருளில் மூழ்கியுள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகள், தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல சிரமப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி பெண் தொழிலாளர்களிடம் சில்மிஷம், செயின்பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து கழிவுநீர் கால்வாய்களை மழைக்காலத்துக்கு முன்பாக தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும், குப்பையை எரிப்பதை தடுத்தல், மின் விளக்குகள் அனைத்து பகுதிகளிலும் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல  செய்திகள்
Advertisements/Default.jpg
இதர சினிமா செய்திகள்
symbol நான் எந்த கட்சியிலும் சேரவில்லை
symbol தெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
symbol "இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ
symbol சமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்!