Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
செய்திகள்
 
 
 
 
  கள்ளநோட்டு கும்பல் முக்கிய நபர் ரூ . பல கோடியுடன் தப்பி ஓட்டம்
 
Published on 29-Jul-2010
Tags Erode Live
 
 
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கள்ளநோட்டு கும்பலை கைது செய்த கியூ பிரிவு போலீசார், கும்பலின் முக்கிய நபரை பிடிக்க திட்டமிட்டது தெரிந்து, முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ளநோட்டுடன் தப்பினார். தமிழகத்தில் சுற்றுலா ஸ்தலங்களை குறிவைத்து கள்ள நோட்டுகளை வெளி மாநில கும்பல் புழக்கத்தில் விட்டு வருகின்றன . இது தொடர்பாக கன்னியாகுமரியில் ஜார்கன்ட் மாநிலத்தை சேர்ந்த எட்டு பேரை போலீசார் கைது செய்து, 6 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் ,ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ,ஏர்வாடியை சேர்ந்த தர்பார் லாட்ஜ் உரிமையாளரின் மகன் செய்யது முகம்மது அல்டாப்(25) உள்ளிட்ட சிலர் கள்ளநோட்டுகளை மாற்றுவது கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.

அதன்படி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்ற செய்யது முகம்மது அல்டாப், கீழக்கரையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(29) டிரைவர் செய்யது அபுதாகிர்(30) ஹீரோ ஹோண்டா பேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த சிவகுமார்(40) ஆகியோரை பிடித்து விசாரித்தில் ,"கள்ள நோட்டு மாற்றியதும் , மாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு, கள்ளநோட்டை மாற்றி கிடைத்த 55 ஆயிரம் மற்றும் ஆட்டோ, மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ,"கள்ளநோட்டு கும்பலின் முக்கிய நபர் பல கோடி ரூபாய் கள்ள நோட்டுடன் தங்களை பார்க்க வந்து கொண்டு இருப்பதாகவும்,' தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசாரும் கைதானவர்களை கொண்டு , முக்கிய நபரிடம் மொபைல் போனில் பேசி சீக்கிரம் வரும்படி,' கூறினர். அந்த நபரோ, ""நீங்கள் போலீசிடம் மாட்டி கொண்டது தெரியும்,'' என கூறி, போனை ஆப் செய்து தப்பிவிட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும்
தீயணைப்புதுறையை பாடாய்படுத்தும் மர்மபோன் நபர் : நெல்லையில் தூங்கும் போலீசின் அவலநிலை!
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பலமாக இருக்கிறது : கருணாநிதி
ஸ்டிரைக்: அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி விநியோகத்துக்கு ஏற்பாடு
கல்வி நிறுவனத்தில் "ராகிங்' கொடுமை தடுங்கள்: ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
போலீசார‌ை கடத்திய முக்கியப்புள்ளி கைது; 3 போலீசார் உயிருடன் மீட்கப்படுவார்களா ?
வாசகர்களின் கருத்து
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24558  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE