| |
| |
காங்கிரசுடன் பா.ஜ., திடீர் கூட்டணி: பால் தாக்கரே கடும் தாக்கு |
| |
 |
Published on |
|
 |
Tags |
erodelive |
|
|
|
| |
மும்பை : அவுரங்காபாத் நகராட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்த பா.ஜ.,வை சிவசேனா தலைவர் பால் தாக்கரே கடுமையாக விமர்சித் துள்ளார்.
அவுரங்காபாத் நகராட்சிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி நிலைக்குழு தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ., வின் ராஜூ ஷிண்டே, காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி பெற்றார். சிவசேனா கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார்.பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையிலான் "திடீர்' கூட்டணி பற்றி சிவசேனா தலைவர் பால் தாக்கரே தனது "சாம்னா' நாளிதழில் கடுமையாக விமர்சனம் செய் துள்ளார்.பதவிக்காக, பா.ஜ., - காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் மூலம் அதன் உண்மையான முகம் வெளிப் பட்டுவிட்டது.காங்கிரசுடன் பா.ஜ,. கைகோர்த்த விஷயம் ஒரு இரவில் நடந்ததல்ல. நீண்ட காலமாக திட்டமிட்டு கூட்டணி வைத்து பதவியை கைப்பற்றியுள்ளனர்.
பதவிக்காக ஏற்கனவே இதுபோன்று பல விஷயங்களில் பா.ஜ., நடந்து கொண்டுள்ளது. டில்லியில் ஆட்சியை பிடிக்க பா.ஜ., ராமர் கோவில் பிரசாரத்தை கையில் எடுத்தது. பின், ராமர் கோவில் பிரசாரத்தில் இருந்து பின் வாங்கியது அனைவருக்கும் தெரிந் ததே. நாங்கள், இந்துத்வா கொள்கைகளை பின்பற்றி வருகிறோம். ஆனால், அதிலிருந்து பின்வாங்கமாட்டோம். பா.ஜ,. பதவிக்காக கொள்கைகளிலிருந்து பின்வாங்கிவிடும்.மேலும், காங்கிரஸ் கட்சியும் முஸ்லிம் சமுதாய ஓட்டுகளை பெறுவதற்காக, முஸ்லிம்களை திருப்திபடுத்தும் நோக்கில் செயல்படுகிறது. அதேபோன்று, பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமான ஜின்னா விவகாரத்திலும் இரட்டை வேடம் போடுகிறது. ஆனால், நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செயல்படமாட் டோம்.ஆனால், ஜின்னா பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பற்றி பால் தாக்கரே எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. |
| மேலும் |
|
| இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே ! |
|
| |
|
|
|
|
|
|
|
|