| சபரிமலை : "பிரதிஷ்டா சங்கல்பங்களை மீறி கோவிலின் எந்த பகுதியையும் விரிவுபடுத்தக்கூடாது' என, கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தெரிவித்தார்.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ள பதினெட்டாம் படி மற்றும் மூலவர் சன்னிதியை விரிவுப்படுத்த, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பரிசீலிக்கவேண்டுமென கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறியதாவது:சபரிமலையில் அய்யப்ப சுவாமிக்கு உள்ள அதே முக்கியத்துவம் தான், பதினெட்டாம் படிக்கும் உள்ளது. அதில், ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு பிரதிஷ்டா சங்கல்பம் உள்ளது. அதற்கேற்ப தான், படி பூஜை நடத்தப்படுகிறது. படிகளுக்கு தேய்மானம் வந்தபோது, படிகளை மாற்றாமல் அப்படியே வைத்து, அதன் மேல் தான் பஞ்சலோகம் வேயப்பட்டுள்ளது. மூலவர் சன்னிதியில் மூலவர் விக்ரகம் எந்த அளவு உள்ளதோ, அதன் அடிப்படையில் தான் சன்னிதி கதவு அமைக்கப்பட்டுள்ளது. அக்கதவை விரிவுப்படுத்த வேண்டும் என்று சொல்வது, மூலவரை மாற்ற வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது.இவ்வாறு தந்திரி கண்டரரு மகேஸ்வரரு கூறினார்."ஐகோர்ட் உத்தரவின் நகல் கிடைத்த பிறகு, பதினெட்டாம் படி மற்றும் சன்னிதி ஆகியவற்றை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக விவாதம் நடத்தப்படும்' என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர் தெரிவித்தார். |