இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 20 ஓவர் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு முன் பாகிஸ்தானின் உமர் குல் 3 ஓவர்கள் வீசி 6 ரன்களை வீட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய மெண்டிஸ், 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
நியூசிலாந்தின் டிம் செüதி, தென்னாப்பிரிக்காவின் ரேயன் மெக்லரன், கென்யாவின் ஓடியாம்போ, மேற்கிந்தியத்தீவுகளின் சமி ஆகியோரும் 20 ஓவர் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
|