Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
விளையாட்டு
 
 
 
 
  ரொனால்டினோ பரிதாபம்
 
Published on
Tags erodelive
 
 
பிரேசில் அணியின் அசைக்க முடியாத நட்சத்திரமாக இருந்த ரொனால்டினோவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. இம்முறை உலக கோப்பை தொடருக்கான 23 பேர் கொண்ட அணியில் இடம் பெற இயலவில்லை. "ரிசர்வ்' வீரர்கள் பட்டியலில் உள்ள இவர், யாருக்காவது காயம் ஏற்பட்டால் வாய்ப்பு பெறலாம். இளம் பருவத்தில் இருந்தே கால்பந்து போட்டிகளில் அசத்தினார் ரொனால்டினோ. தனது 13வது வயதில் உள்ளூர் போட்டி ஒன்றில் தனிப்பட்ட முறையில் 23 கோல் அடித்து சாதனை படைத்தார். "பிரி கிக்' ஸ்பெஷலிஸ்டான இவர், 1999ல் மிகவும் "பிசி'யாக இருந்தார். இந்த ஆண்டு நடந்த "பிபா' யூத் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற இவர், அதன்பின் நடந்த "கான்பெடரேஷன்' கோப்பை தொடரில் பங்கேற்றார். இதில் பைனல் தவிர மற்ற அனைத்து போட்டியிலும் கோல் அடித்து அசத்தினார். இத்தொடரின் சிறந்த வீரருக்கான "கோல்டன் பால்' விருதை தட்டிச் சென்றார். பின் 2002ல், முதன்முதலில் உலக கோப்பை தொடரில் விளையாடினார். இதில் ரொனால்டோ, ரிவால்டோ, ரொனால்டினோ அடங்கிய "ஆர்' கூட்டணி மிரட்ட, பிரேசில் அணி 5வது முறையாக கோப்பை வென்று சாதித்தது. கடந்த 2005ல் இவரது தலைமையில் பிரேசில் அணி 2வது முறையாக "கான்பெடரேஷன்' கோப்பை வென்றது. கடந்த 2006ல் நடந்த உலக கோப்பை தொடரில் இவர் இடம் பிடித்த போதிலும், பெரிய அளவில் சாதிக்கவில்லை. இத்தொடரில் பிரேசில் அணி, காலிறுதியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. இதனால் பிரேசில் ரசிகர்கள் மற்றும் மீடியாவால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். அதன்பின் கடந்த 2008ல் பீஜிங் ஒலிம்பிக்கில் விளையாடி இவர் 2 கோல் மட்டுமே அடித்தார். இதில் பிரேசில் அணி வெண்கலம் வென்றது. இதுவரை பிரேசில் அணி சார்பில் 87 போட்டியில் விளையாடிய இவர், 32 கோல்கள் அடித்துள்ளார்.
மேலும்
வெற்றியுடன் துவக்குமா பிரேசில் *இன்று வட கொரியாவுடன் மோதல்
"சேம் சைடு கோல்'': டென்மார்க் தோல்வி* நெதர்லாந்து அபாரம்
வங்காளதேச டெஸ்ட்: இங்கிலாந்து அணி தொடரை வென்றது
ரொனால்டினோ பரிதாபம்
பிரெஞ்ச் ஓபன்: "நம்பர்-1' நடால் சாம்பியன்
வாசகர்களின் கருத்து
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24333  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE