அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஹில் (30). ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கிரேகரி கொலின்ஸ் (19). அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளைக்காரர். இவர்கள் இருவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
கிரேகரி கொலின்ஸ்சுக்கு ஆப்பிரிக்காரரான அந்தோணி ஹில் மீது இன வெறி இருந்து வந்தது. சம்பவத்தன்று தனது வீட்டிற்கு ஹில்லை கொலின்ஸ் அழைத்து இருந்தார்.
அதன்படி ஹில்லும் சென்று இருந்தார். அப்போது அவரை கொலின்ஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அவரது உடலை கார் மூலம் பல கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று ரோட்டோரம் வீசினார்.
இதற்கிடையே ஹில் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். அவரது நண்பர்களிடம் விசாரித்த போது அவர் கொலின்ஸ் வீட்டுக்கு சென்று இருந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். முதலில் அவர் வீட்டை விட்டு வெளியே வர மறுத்து விட்டார். பின்னர் கண்ணீர் புகை குண்டு வீசினர். அதை தொடர்ந்துஅவர் போலீசாரிடம் சரண் அடைந்தார். பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் விசாரித்த போது ஹில் உடலை காரில் பல கிலோ மீட்டர் தூரம் எடுத்து சென்று ரோட்டோரம் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டது. |
| மேலும் |
|
| இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே ! |
|
| |
|