Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வாலிபர் மர்ம மரணம் நம்பியூரில் பெண் புகார்| மாஜி துணைவேந்தர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு, 5 ஆயுள் தண்டனை| அரசு பஸ்- லாரி மோதி தீப்பிடித்தது: 9 பேர் சாவு, 35 பேர் படுகாயம்
௨லகம்
 
 
 
 
  ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்
 
Published on
Tags
 
 
ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,யில் நடப்பாண்டுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அரசு ஐ.டி.ஐ.,யில் பொருத்துனர், கடைசலர், எந்திர வேலையாள், மின் பணியாள், மின்கம்பியாள், டெக்ஸ்டைல் வெட் பிராஸஸிங் டெக்னீஷியன் ஆகிய இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கும், பற்ற வைப்பவர் ஓராண்டு தொழிற் பிரிவுக் கும் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மின்கம்பியாள் மற்றும் பற்ற வைப்பவர் படிப்புக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற தொழிற்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனைத்து பிரிவுக் கும் வயது 14 முதல் 40 வரை இருக்கலாம்.

பயிற்சி கட்டணம் இலவசம். கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் வரிசை அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சேர்க்கை ஆணை வழங்கப்ப டும். எஸ்.ஸி., எஸ்.டி பயிற்சியாளர்களுக்கு அரசு விதிமுறைகளின்படி மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இதர இன பயிற்சியாளர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்ப டும். அரசு ஐ.டி.ஐ.,யில் கட்டிடப்பட வரைவாளர் (டிராட்ஸ்மேன் சிவில்), கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய இரண்டு புதிய தொழிற்பிரிவு துவக்கப்படவுள்ளது. விண்ணப்பத்தின் விலை 50 ரூபாய். விண்ணப்பங்கள் வரும் 21ம் தேதி வரை விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அன்றே வழங்க வேண்டும்.
மேலும்
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தது
கால்பந்தாட்டத்திலும் "கலக்கிய' மகாத்மா காந்தி
ஆந்திராவுக்கு படையெடுக்கும் போலி டாக்டர்கள்
அமெரிக்காவில் ஆந்திர மாணவர் கொலை
அமைதியான நாடுகள் பட்டியல் : பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தியா
வாசகர்களின் கருத்து
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
கருத்தை எழுதுங்கள்

* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.
   
பெயர் :      
கருத்து :   
 
 
 
 
 
 
 
 
 
 
Untitled Document
 
No Of Viewers 24346  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE